வளமான நாடுகளை விடவும் சிறப்பாக இலங்கை கொரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளது என இலங்கையிலுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி டொக்டர் ரைஸா பென்சே அண்மையில் இலங்கையிலுள்ள ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த போதிலும் சிறந்த ஐந்து நாடுகளின் பட்டியலில் உலக சுகாதார நிறுவனம் இலங்கையை உள்ளடக்கவில்லை.
கொவிட் 19 ஐ சிறப்பாகக் கட்டுப்படுத்திய நாடுகளில் கம்போடியாவில் மரணங்கள் எதுவுமின்றி 225 தொற்றாளர்களும் வியட்நாமில் மரணங்கள் எதுவுமின்றி 420 தொற்றாளர்களும் நியுசிலாந்தில் 22 மரணங்களுடன் 1556 தொற்றாளர்களும், ருவாண்டாவில் 5 மரணங்களுடன் 1821 தொற்றாளர்களும் தாய்லாந்தில் 58 மரணங்களுடன் 3295 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர். இலங்கையில் 11 மரணங்களுடன் 2724 பேர் பதிவாகியுள்ளனர்.
சமூக இடைவெளி பேணுதல், கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், மக்கள் புழங்கும் இடங்களில் ஒன்று கூடுவதைத் தவிர்த்தல் போன்றவற்றை அவதானித்தே இந்தத் தெரிவு நடைபெற்றதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment