சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ்
கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கம் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 23,098,181 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 6,601,622 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61,849 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 15,701,892 அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 802,365 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா - 179,200
பிரேசில் - 113,454
மெக்சிகோ - 59,610
இந்தியா - 55,928
இங்கிலாந்து - 41,405
இத்தாலி - 35,427
பிரான்ஸ் - 30,503
ஸ்பெயின் - 28,838
பெரு - 27,034
ஈரான் - 20,376
கொலம்பியா - 16,568
ரஷ்யா - 16,189
தென்னாபிரிக்கா - 12,843
Post a Comment