Top News

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டிக்கவும் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களை தண்டிக்குமாறு பேராயர் மெல்கம் கார்தினால் ரஞ்சித் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்

இந்நிலையில், பொறுப்பற்ற சிலர் இப்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டுபிடித்து தண்டிப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியைக் நிறைவேற்றும் என தான் நம்புவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளையும் தற்போது முன்னெடுத்துள்ளது.


இந்நிலையிலேயே, பேராயர் மெல்கம் கார்தினால் ரஞ்சித் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post