இனி இலங்கையில் அனைவருக்கும் ஒரே சட்டம் - விமல் வீரவன்ச

ADMIN
0

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் என்றதன் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் மாற்றியமைக்கப்பட இருக்கின்றது.

மேலும் புதிய அரசியலமைப்புக்கு ஏற்றவாறு நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டுச்செல்ல வேண்டிய தேவை உள்ளது.

இதற்கு நடைபெற்று முடிந்த பொது தேர்தலில் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற அடிப்படையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top