Top News

துரோகம் செய்த பொதுஜன பெரமுன தயாசிறி ஆதங்கம் .



புதிய அரசாங்கத்தில் தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை கோரியிருந்த போதிலும் ராஜாங்க அமைச்சர் பதவியே வழங்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

வாராந்த சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்று பேரின் பெயர்களை பொதுஜன பெரமுனவுக்கு அனுப்பி இருந்தது.

நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர மற்றும் எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகளை நான் வரிசைப்படுத்தி அனுப்பி இருந்தேன்.

அதில் முதலில் ரோஹன லக்ஷ்மன் பியதாசவின் பெயரே முதலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுரேன் ராகவனை தேசிய பட்டியலில் நியமித்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post