சவூதி அரேபியாவில் அல் காசிம் எனும் இடத்திலையே உலகிலையே மிகப்பெரிய பேரீத்தம் பழத்தோட்டம் உள்ளது.
சுமார் 200 000 க்கும் அதிகமான பேரீத்தம் மரங்கள் அங்குள்ளன. 45 வகையான பேரீத்தம் பழங்கள் அங்கு வருடமொன்றுக்கு 10000 டொன்கள் அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த மிகப் பெரிய தோட்டத்தையே வக்பு சொத்தாக கொடுத்துள்ளார் இந்த கொடை வள்ளல். இதன் மூலம் கிடைக்கின்ற வருமானம் உலகில் பள்ளிவாயல்கள் அமைப்பதற்கும், சமூக நல சேவைகள் செய்வதற்கும், மக்கா மதீனா புனித பள்ளிகளில் இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செயவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஆரம்பகாலத்தில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி கஸ்டப்பட்ட இந்த மகான் இறுதியில் தனது கடின உழைப்பின் மூலமும், முயற்சியின் மூலமும் பெரும் செல்வந்தராக மாறினார். தனது படிப்பினை முடித்த பின்னர் ஜித்தாஹ் நகரில் தனது அறையில் நிதி நிறுவனமொன்றை ஆரம்பித்து நடாத்தினார். மிக குறுகிய காலத்தில் Al Rajhi அல் ரஜ்ஹி வங்கியாக அது சவூதி அரேபியா பூராக வியாபித்தது. இன்று இந்த வங்கி சவூதியின் மிகப்பெரிய ஒரு வங்கியாகும்.
தான் படிக்கும் காலத்தில் 1 ரியாலுக்கு கஸ்டப்பட்டு பள்ளி சுற்றுலாவை தவறவிருந்த சமயத்தில் தனக்கு அந்த பணத்தை கொடுத்து உதவிய பலஸ்தீனிய ஆசிரியரை பிற்காலத்தில் தேடி கண்டுபிடித்து சுலைமான் அல் ரஜ்ஹி சொகுசு பங்களா, கார் என்பவற்றை பரிசளித்தார்.
சவூதி அரேபியாவின் மிகவும் மதிப்புமிக்க சுலைமான் அல் ரஜ்ஹியின் வக்பு சொத்துக்கள் மட்டும் 60 பில்லியன் ரியால்கள் என்பது ஆச்சரியப்படுத்தத்தக்கது.
Post a Comment