Top News

பாகிஸ்தானின் உதவியதால் தான் நாங்கள் இந்த நாட்டிலிருந்த புலி பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டினோம்.


புலிகள் யாழ்ப்பாணத்தை வென்றெடுப்பதனை பாகிஸ்தான் உதவியினாலேயே தடுக்க முடிந்தது என புதிய வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு மிகவும் முக்கியமான நாடுகள். ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினருக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த இடமளிக்ககூடாது.

மேற்குலகு சார்ந்த வெளியுறவு கொள்கையில் இருந்து விலகுவதற்கான காலம் கனிந்திருக்கின்றது.

தெற்காசியாவும் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர பிரச்சினைகளைக் கொண்டுள்ளன. இரண்டும் எமது நண்பர்கள். மிகவும் நெருக்கடியான காலங்களில் அவை இரண்டும் எமக்கு உதவியுள்ளன.

யுத்த காலத்தில் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையில் நாங்கள் கிட்டத்தட்ட வடக்கை இழந்துவிட்டோம்.

பாகிஸ்தானே எமக்கு பல்குழல் ரொக்கெட் லோஞ்சர்களை அனுப்பி உதவியது. தங்களது நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வந்த பகுதிகளிலிருந்து அவற்றை இலங்கைக்கு வான் மார்க்கமாக அனுப்பி வைத்தனர்.

அதன் மூலமே புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற முடியாமல் தடுக்க முடிந்தது. பாகிஸ்தானின் உதவி சிறப்பான விடயம்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் எமக்கு முக்கியமானவை. இந்தியா எமது அயல்நாடு. முழு உலகுடனும் நல்லுறவு வைத்திருப்பது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post