மாகாணசபைகள் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் ஆணையாளர் ஓய்வுபெறவேண்டும் என அமைச்சர் விமல்வீரவன்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று -25- செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகள் தேர்தல் தொடர்பில் முரணான அணுகுமுறையை தேர்தல் ஆணையாளர் பின்பற்றுகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் போது மாகாணசபைகள் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் அலட்சியமாக அக்கறையற்று காணப்பட்டார் என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது மாகாணசபை தேர்தல்கள் இடம்பெறுவதை துரிதப்படுத்த அவர் முயல்கின்றார் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகள் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் ஆணையாளர் ஒய்வுபெறுவது புத்திசாலித்தனமான செயல் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment