Top News

இரண்டு தலைகள், நான்கு கண்கள் கொண்ட விசித்திர ஆட்டுக்குட்டி (இலங்கை)


புத்தளத்தில் இரண்டு தலைகள், நான்கு கண்கள் கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.

ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் நேற்று இந்த அபூர்வ ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. இந்த ஆட்டுக்குட்டியுடன் மேலும் இரு குட்டிகள் பிறந்துள்ளன.

ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவரினால் வளர்க்கப்படும் ஆடு ஒன்றே அபூர்வ குட்டியை பிரசவித்துள்ளது.

நேற்று காலை பிறந்த இந்த அபூர்வ ஆட்டுக்குட்டி மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

விசித்திரமான தோற்றத்துடன் பிறந்துள்ள இந்த ஆட்டுக்குட்டியை பார்வையிட அந்தப் பகுதி மக்கள் பெருமளவு வந்து செல்கின்றனர்.

ஆட்டுக்குட்டியை நன்றாக பார்த்துக் கொள்வதாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post