Top News

ரதன தேரர் கைது செய்யபடுவார் பொலிஸ் உயர் அதிகாரி அறிவிப்பு


அத்துரலியே ரதன தேரர் பொலிஸ் அதிகாரிகளைச் சந்திக்காமல் இருக்க முயன்றால், கைது செய்யபடுவார் என பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித் தாார்.

நபர் ஒருவரை கடத்தினார் என்ற புகார் தொடர்பாக அறிக்கையைப் பெற பொலிஸார் பலமுறை முயன்ற போதும் அத்துரலியே ரதன தேரர் இதனைத் தவறியமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதினிகம விமல திஸ்ஸ தேரர் பல நாட்களாகக் காணாமல் போயுள்ளார் இந்நிலையில் ரதன தேரரால் கடத்தப்பட்டதாக தற்போதும் பொலிஸாருக்கு புகார் கிடைக்கப்பெற்றுள்ளது.



இது தொடர்பாக ஒரு அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற் காகப் பல முறை முயற்சி செய்தும் ரதன தேரர் தொடர்ச்சியாக சந்தர்ப் பத்தை நழுவ விடுவதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post