தேசிய விளையாட்டு சபையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மேலும் 13 பேர் குறித்த சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் வைத்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவின் உறுப்பினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா, ஜூலியன் போலிங், திலந்த மலகமுவ, கஸ்தூரி செல்லராஜா வில்சன், சுபுன் வீரசிங்க, ரொஹான் பெர்னாண்டோ, ருவன் கேரகல, சஞ்சீவ விக்ரமநாயக்க, மேஜர் ஜெனரல் ராஜித அம்பேமொஹட்டி, ரொவேனா சமரசிங்க, யஸ்வந்த் முத்தெட்டுவேகம, A.J.S.S எதிரிசூரிய மற்றும் தியுமி அபேசிங்க ஆகியோர் குறித்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment