அவசரப்பட்டு மாகாண தேர்தல்களை நடத்த வேண்டாம் - பௌத்த செயலணி ஜனாதிபதிடம் வேண்டுகோள்

ADMIN
0

அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அவசரப்பட்டு மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டாம் என பௌத்தசாசன செயலணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பௌத்தசாசன செயலணி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

20வது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் மாகாணசபை தேர்தல்களை நடத்த முற்படுவது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக அமையாது என பௌத்தமதகுருமார்களை உள்ளடக்கிய பௌத்த சாசன செயலணி தெரிவித்துள்ளது.

தாமதமாகியுள்ள மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு முன்னர் அரசாங்கம் தேர்தல்முறையில் மாற்றங்களை மேற்கொள்ள முயலவேண்டும்,13 வது மற்றும் 16 வது திருத்தங்களால் உருவாகியுள்ள ஆபத்துக்களை நீக்குவதற்கு முயலவேண்டும் எனவும் பௌத்தசாசன செயலணி ஜனாதிபதிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top