பேருவலை பிரதேச சபை உருப்பினறும், எனது தந்தையின் உற்ற நண்பரின் புதல்வருமான நண்பர் ஹஸீப் மரிக்கார் சமூக பிரச்சினைகளை தனது பிரச்சினையாகக் கொண்டு பல்வேறு பட்ட அபிவிருத்திகளையும் உரிமை குரலையும் எழுப்பி வந்த ஒரு இளம் மக்கள் பிரதிநியாவார்.
இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேருவலை தொகுதி அமைப்பாளராக இருந்து மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியித்தீன் அவர்களுடன் இணைந்து பல்வேறு பட்ட அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருவது யாவரும் அறிந்ததே.
அண்மையில் தர்கா நகரில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றை சுமூகமாக தீர்த்து மக்கள் பிரதிநிதியாக கடமையாற்ற முன் வந்த போது அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்படாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டார். இதன் போது பலரும் அவரின் விடுதலைக்காக இருகரம் ஏந்தி பிரார்த்தனை செய்ததன் விளைவாக இறைவன் துணையோடு 26.08.2020 விடுதலை செய்யப்பட்டார். என்றும் மக்களின் அபிமானம் பெற்ற இளம் அரசியல்வாதி என்பதை இவர் சிறைவாசம் இருக்கும் போது மக்களின் உணர்வுகளிணூடாக அறிந்து கொள்ள முடிந்தது.
ஆசிரிய தம்பதிகளின் மகனான இவர் போன்ற கற்ற இளம் அரசியல்வாதிகளின் சேவை சமூகத்திற்காக எப்போதும் தேவை. இவரின் விடுதலைக்காக பிரார்த்தனை செய்த, முயற்சிகள் செய்த அனைவருக்கும் நன்றிகள்.
தடம் புரளாது, பிரச்சினை கண்டு துவளாது ஹஸீப் மரிக்காரின் பணிகள் தொடர வாழ்த்துக்கள்.
எம்.பர்ஹத் ஹஸீம்
Post a Comment