Top News

மனித குலத்தவர் மனங்களில் தியாக உணர்வு தளிர் விடட்டும்…! தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ. எல். எம் அதாஉல்லா..


மகத்துவமிக்க ஹஜ்ஜூப் பெருநாளை,  நம் நாட்டு உடன்பிறப்புகளும், உலகெங்கும் பரந்து வாழும் முஸ்லிம் உம்மத்துக்களும், விஷேடமாக அசாதாரன சூழ்நிலை காரணமாக நாட்டுக்கு வந்து தத்தமது குடும்பங்களுடன் கொண்டாட முடியாமல் வெளிநாடுகளில் சிக்குன்டு தியாக உணர்வுகளோடு இன்று பெருநாளை கொண்டாடுகின்றனர். 
அவர்கள் எல்லோருக்குமாக எனது உளம் கனிந்த ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைத்தூதர் இப்றாஹீம் நபியின் துணிச்சல்மிக்க தியாகம்தான் சத்தியத்தை இவ்வுலகில் நிலைக்க வைத்துள்ளது. அர்ப்பணிப்பு, தியாகம், பொறுமைகளில் கட்டமைக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் எவ்விடயமானாலும் இலட்சியத்துடன்தான் இயங்க வேண்டும்.
இந்த படிப்பினைகள் இலட்சியத் தூதர் இப்றாஹீம் நபியின் வாழ்க்கையோடு ஒட்டியிருந்தன. அவரது தியாகம் உலகுள்ளவரை நினைவு கூறப்படுவதும் இதற்காகத்தான்.
படிப்பினைகளுக்காக மட்டும் இப்றாஹீம் நபியின் வாழ்க்கையைக் கொள்ளாது, நம் வாழ்வியல் நடைமுறைகளிலும் முஸ்லிம்கள் இதைக் கடைப்பிடிப்பது அவசியமாகின்றது. ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் சகலரது நேரிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற நான் பிராத்திக்கிறேன்.
இறைத்தூதர் இப்றாஹீம் நபியின் தியாகங்களால் கட்டிக் காக்கப்பட்ட இஸ்லாம் சகலருக்கும் எடுத்துக்காட்டான வாழ்க்கை வழி முறையாகவே உள்ளது. இந்த வழி முறைகளில் சமூக ஐக்கியம், சகோதரத்துவம், மற்றும் புரிந்துணர்வுகளே முன்னிலை வகிக்கின்றன.
இவ்வாறான சிந்தனைகளைத்தான், தேசிய காங்கிரஸ் கொள்கையாகக் கொண்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் சகல சமூகங்களையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் சிந்தனைகள்தான் எமது சமூகத்தைப் பாதுகாக்கும். விஷேடமாக எமது இளம் சமூதாயத்தினர் தூர நோக்கோடு உணர்ச்சியூட்டப்படாமல் வழிகாட்டப்படல் காலத்தின் தேவையாகவும் உள்ளது. 
இதற்காக கொள்கை, கோட்பாடுகள் தவிர்த்து மார்க்க அறிஞர்கள், புத்தி ஜீவிகள் பாடுபட வேண்டும் .

Post a Comment

Previous Post Next Post