பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த கோழி இறைச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் ஷென்ஷென் நகரில் பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த கோழி இறைச்சியின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை பரிசோதித்ததில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கோழி இறைச்சியானது பிரேசில் நாட்டின் தென் மாகாணமான அரோரா அலிமென்டோசில் உள்ள ஆலையில் இருந்து வந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக ஷென்ஷென் நகர மக்கள் இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்ளூர் அரசு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுபற்றி அரசு தரப்பில் கூறுகையில் ‘இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நீர்வாழ் பொருட்களை வாங்கும்போது நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த கோழி இறைச்சியுடன் தொடர்பில் இருந்த நபர்களையும் தொடர்புடைய பிற தயாரிப்புகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.
👁️🗨️
*_🤳🏼KT NEWS Alert 💫_*
https://chat.whatsapp.com/LrNRcgIx1KrDhKgjWO9y0j