(இராஜதுரை ஹஷான்)
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கம் தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது என்ற காரணத்தினால் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. மக்களை ஒன்றுத்திரட்டி கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம். மக்களின் உரிமைகளையும், நிவாரணங்களையும் பலமான எதிர்க்கட்சியாக செயற்பட்டு பெற்றுக் கொடுப்போம் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொளள் வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
வட கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Post a Comment