எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதினிகம விமல திஸ்ஸ தேரர் தனது பெயரை தேசிய பட்டியல் உறுப்பினர் என பெயரிட்டுத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தை மீளப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சத்திய அறிக்கை மூலம் ஆணைக்குழுவிற்கு இது தொடர்பாக விமல திஸ்ஸ தேரர் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, எங்கள் மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் பதவிக்கு அதுரலியே ரதன தேரரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
இருப்பினும், எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரான விமல திஸ்ஸ தேரரை பதவியிலிருந்து கடந்த 7 ஆம் திகதி நீக்கப்பட்ட தால் , குறித்த கடிதங்களின் செல்லுபடியாகும் தன்மை குறித்து சட்டச் சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment