Top News

O/L பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு


 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது.

இதன்படி ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சையை நடாத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறையை டிசம்பர் 24 ஆம் திகதி வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 31 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk ஊடாகவும் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post