Top News

16 வயது பாடசாலை மாணவன் பலியான சோகம்!


கிராந்துருகோட்டே பொலிஸ் பிரிவின் பஹலரத்கிந்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்

நேற்றிரவு (10) 7.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பஹலரத்கிந்த பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிராந்துருகோட்டே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post