லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் 2,750 டன் எடையுடைய அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் 180 பேருக்கும் மேல் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். மேலும், இந்த வெடி விபத்தால் சுமார் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.
இந்நிலையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள எண்ணெய் மற்றும் டயர் கிடங்கில் இன்று மீண்டும் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் தீ மளமளவெனப் பரவி அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.
தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. விபத்து நடந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. விபத்தில் ஏற்பட்ட உயிர்சேதம், பொருட்சேதம் பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
Post a Comment