சாரதிகளுக்கு எச்சரிக்கை - இந்த சட்டத்தை மீறினால் 2 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை
நாளை (17) முதல் அமுல்படுத்தப்படும் வீதி ஒழுங்கு விதிகளை மீறி செயற்படும் சாரதிகள் மற்றும் மோட்டார் வண்டிகளை செலுத்துனர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வாகன கோக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.
இராஜகிரிய பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வீதி ஒழுங்கை விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக 2 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதிக்கப்படுவதுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கடந்த 14 ஆம் திகதி முதல் இன்று வரையான நாட்களில் வீதி ஒழுங்கை விதிகளை பரீட்சிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு வீதி ஒழுங்கை விதிகள் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் அதனை முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மற்றும் மோட்டார் வண்டி செலுத்துனர்கள் முறையாக கடைப்பிடிக்காதால் ஏற்பட்ட வாகன நெரிசலை கட்டுப்படுத்த இன்று முதல் அவர்களுக்காக ஒற்றை வழி மாத்திரம் போக்குவரத்தில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
´இலங்கை இராணுவத்தின் டிரோன் கமராக்களை பயன்படுத்தி நாளை முதல் வீதி ஒழுங்குகளை மீறும் சாரதிகளையும், மோட்டார் வண்டி செலுத்துனர்களையும் கண்காணித்து அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்´ என வாகன கோக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி இந்திக்க ஹபுகொட மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment