Headlines
Loading...
20க்கு ஆதரவு வழங்க முகா திட்டம் - உயர்பீடக் கூட்டத்தில்  அமளி துமளி.

20க்கு ஆதரவு வழங்க முகா திட்டம் - உயர்பீடக் கூட்டத்தில் அமளி துமளி.


( ஏ.எச்.எம்.பூமுதீன் )

முகா உயர்பீடக் கூட்டம் நேற்று இரவு - கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.

கூட்டம் - பரபரப்புடனேயே ஆரம்பித்தது.

முகா எம்பீக்கள் மூவர் - அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக பலராலும் கூறப்படுகின்றது. முகநூல்களிலும் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பில் விளக்கம் தர வேண்டும் என்று ஒருமித்த குரலில் பலர் கேள்வி எழுப்பினர்.

ஆம். பேசுகிறோம்.இதில் என்ன தவறு இருக்கிறது என்று ஒரு போடு போட்டார் பைசால் காசீம் எம்பி.

ஹரீஸ் எம்பி அடுத்து எழுந்து -

கடும் தொனியில் பேச ஆரம்பித்தார்.

20 இற்கு ஆதரவளிப்பதா அல்லது இல்லையா ? என்பதைப் பற்றி பேசும் தருணம் அல்ல இது.

முஸ்லிம் சமுகத்தின் பாதுகாப்பு ,இருப்பைப் பற்றி பேசும் தருணமே இது.

சமுகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது அது தொடர்பில் மக்கள் எங்களிடம்தான் கேள்வி கேட்பார்கள்.மாறாக , இங்கு வெட்டியாக பேசுகின்ற உயர்பீட உறுப்பினர்களிடம் அல்ல.

இங்குள்ள பலர் என்னை தோற்கடிக்கவே முயற்சி செய்தனர். அல்லாஹ்வுக்கு அடுத்து எனது மாவட்ட மக்கள்தான் என்னை தோற்கடிக்க முடியும். எனக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்திற்கு இணங்கவே தான் நான் செயற்படுவேன்.

எனது எந்தவொரு முடிவும் கட்சிக்கோ - தலைவருக்கோ துரோகம் இழைப்பதாக இருக்க மாட்டாது.

முஸ்லிம் சமுகத்தின் பிரச்சினைகளை அரசுடன் தான் பேச வேண்டும்.அரசுடன் பேசாமல் வேறு யாருடன் பேச சொல்கிறீர்கள்.

வெட்டித்தனமாக இங்கு யாரும் பேச முனையக் கூடாது என்று கடும் ஆக்ரோஷமாக ஹரீஸ் எம்பி பேசியபோது உயர் பீடத்தில் பெரும் அமைதி நிலவியது. யாரும் மறு பேச்சு பேசவேயில்லையாம்.

ஹரீஸ் எம்பி யின் கருத்துக்களில் நியாயம் உள்ளது என்றார் முகா தலைவர் ஹக்கீம்.

ஹாபீஸ் நசீர் எம்பி :- தேசியப் பட்டியல் தராமல் ஏமாற்றியவருடன் இனி நமக்கென்ன பேச்சும் உறவும். நாம் - நமது சமுகம் தொடர்பான விடயங்களை அரசுடன் தான் பேச வேண்டும் என்றார்.

தௌபீக் எம்பி - இங்கு ஏதும் பேசாவிட்டாலும் -, ஏனைய எம்பீக்களின் கருத்துக்களோடு ஒத்துப்போனதை அவதானிக்க முடிந்ததாக கூறப்படுகிறது.

தேசியப்பட்டியல் விடயத்தில் 'எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது 'என்ற ரீதியில் கருத்துக் கூறி ஹரீஸ் எம்பியை மறைமுகமாக சாட முனைந்தார் செயலாளர் நிஸாம் காரியப்பர்.

இதற்கும் - உயர்பீடத்தினரின் தேசியப் பட்டியல் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார் முகா தலைவர் ஹக்கீம்.

"தேசியப் பட்டியல் விடயத்தில் யாரும் எவருக்கும் துரோகம் செய்யவில்லை.நேர்மையாகவே நடந்தேன்" என்றார் ஹக்கீம்.

அடுத்து - தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

ரிஷாத் பதியுதீனுக்கு ஆதரவாக - வன்னி சென்று உரையாற்றியது மகா தவறு என்று ஹக்கீம் மீது ஒட்டுமொத்த உயர்பீடமும் குற்றம் சுமத்தியது.

இதற்கு பதிலளித்த ஹக்கீம்:- நான் அவ்வாறு பேசினாலும் பேசாவிட்டாலும் ரிஷாத் வெற்றி பெற்றுத்தான் இருப்பார். ரிஷாத் தோற்கடிக்கப்படும் நேரமல்ல இது. இந்த தேர்தலில் ரிஷாத் தோல்வியுற்றிருந்தால் இனவாதிகளின் அடுத்த இலக்கு நான்தான்.என்று சுருக்கமாக பேசி உயர்பீடத்தினரின் வாயை மூடினார்.

பொத்துவில் மற்றும் சாய்ந்தமருது.இந்த இரு ஊர்களும் நமக்கு பின்னடைவு.

சாய்ந்தமருதில் எனக்கு காட்டப்பட்டது வெறும் மாயை. இறுதிக் கூட்டத்தை பார்த்து முழு சாய்ந்தமருதும் எம்மோடுதான் என்று நினைத்தேன். தேர்தல் முடிவு எனது என்னத்தை சிதைத்து விட்டது என்ற ஹக்கீம் - ஒரு 3000 வாக்குகளாவது கிடைத்திருக்குமா என்று உயர்பீடத்தை நோக்கி கேள்வி எழுப்பினார். அப்போது , ஒட்டுமொத்த உயர்பீடத்தினரும் ' ஆம் சேர்.அவ்வளவுதான்.அதை விடக் கூடியிருக்காது' என்றனர்.

கூட்டத்தின் சுருக்கம் அல்லது முடிவு தொடர்பில் கருத்து தெரிவித்த உயர்பீட உறுப்பினர் ஒருவர்.

20 இற்கு - முகா எம்பீக்கள் ஆதரவளிப்பார். அல்லது அரசுடன் இணைவர் போல்தான் உள்ளது.பகிரங்கமாகவே கூறி விட்டார்கள் அரசுடன் பேசுகிறோம் - பேச வேண்டும் என்று.இதைவிட வேறென்ன வேண்டும் என்றார்.

முஸ்லிம் காங்கிரஸ் - 20வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் - அரசுடனும் இணையும்.

0 Comments: