Top News

20 ஆவது வரைபு நாளை, பாராளுமன்றில் சமர்ப்பிப்பு


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபு முதல் வாசிப்புக்காக நாளை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபினை நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் விவாதத்துக்காகவும், நிறைவேற்றத்திற்காகவும் சபையில் சமர்ப்பிப்பார்.

அதன் பின்னர் எந்தவொரு குடிமகனுக்கும் திருத்த வரைபிற்கு எதிராக ஏழு நாட்களுக்குள் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்ய முடியும் என்று பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி‍ எந்தவொரு தரப்பினரோ 20 ஆவது திருத்தத் வரைபை சம்பந்தப்பட்ட காலத்திற்குள் சவால் செய்தால், மனுவை தாக்கல் செய்த நாளிலிருந்து 21 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்க வேண்டும்.

சட்டமா அதிபரின் கூற்றுப்படி, இந்த திருத்த வரைபு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகிறது.

Post a Comment

Previous Post Next Post