Top News

20வது திருத்தத்துக்கு எதிராக, முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது


20வது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நீதிமன்றம் செல்லவுல்லதாக கட்சியின் தலைவர் ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் உத்தேச திருத்தத்தில் பல தவறுகள் உள்ளன என தெரிவித்துள்ளார்.

உத்தேச திருத்தத்தினை மேலும் பலர் எதிர்க்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தை உருவாக்குவது குறித்து கருத்துக்கள் வெளியாகியுள்ள போதிலும் தற்போதைய அரசாங்கம் அதற்கான உறுதியான கால எல்லையை அல்லது யோசனைகளை முன்வைக்கவில்லை என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை குறைத்து ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு 20வது திருத்தம் முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்

நாட்டுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அவசியம் ஆனால் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை பாதுகாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post