Headlines
Loading...
முதன்முறையாக ஒரே நேரத்தில் கரை ஒதுங்கிய 460 திமிங்கலங்கள்

முதன்முறையாக ஒரே நேரத்தில் கரை ஒதுங்கிய 460 திமிங்கலங்கள்


அவுஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய திமிங்கலங்களின் எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 21-ம் திகதி அவுஸ்திரேலியாவில் உள்ள தீவு கடற்கரையான டாஸ்மானியாவில் 460 பைலட் திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கின. பல திமிங்கலங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீண்டும் கடலுக்கு செல்ல முடியாமல் தத்தளித்து வந்தன.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மேற்கொண்டு வரும் முயற்சியில் 50 திமிங்கலங்கள் மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளன. ஆனால், கரை ஒதுங்கிய மொத்த திமிங்கலங்களில் இதுவரை 360 திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டன என்று மீட்பு பணியில் ஈடுபட்டுவரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

மேலும், 30 திமிங்கலங்கள் இன்னும் உயிருடன் கரையிலேயே இருப்பதாகவும், அந்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்கு அனுப்பும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகமும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மிகப்பெரிய கூட்டமாக 460 திமிங்கலங்கள் ஒரே நேரத்தில் கரை ஒதுங்கிய சம்பவம் உலகிலேயே இது தான் முதல் முறை எனவும், இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

0 Comments: