பண்டாரகம, அட்டலுகம, மாராவ பிரதேசத்திற்கு போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியதில் 4 பொலிஸார் காயமடைந்துள்ளதாக அட்டுளுகம பொலிசார் தெரிவிக்கின்றனர்.
வீட்டில் கஞ்சா செடி நாட்டிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.