506 Kg பீடி இலைகளுடன் 6 பேர் கைது.

ADMIN
0

 சட்டவிரோதமான முறையில் 506 கிலோ கிராம், பீடித் தொகையை கொண்டுவர முயற்சித்த 6 பேர் இன்று (05) மாராவில கடற்பரப்பில் கடற்டையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின் போதே, குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பேசாலை, பன்னல மற்றும் எழுவக்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 18 - 50 வயது இடைப்பட்டவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து பீடிகள் இழைகள் நிறைக்கப்பட்ட 16 பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 6 பேரை கைது செய்துள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பீடியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மாராவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top