Top News

தடை செய்யப்பட்ட 80 கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு!


இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள மற்றும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வௌிநாட்டு மதுபானம் உள்ளிட்ட 80 கோடி ரூபாவிற்கு அதிகமான மதிப்புள்ள பொருட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மஞ்சள், வௌிநாட்டு மதுபானம், சீஸ், பெஸ்டா, காய்கறிகள் மற்றும் ஒலிவ் எண்ணைய் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

குறித்த பொருள்கள் பல தடவைகளாக கொண்டு வரப்பட்ட நிலையில், அவற்றில் 1,015,000 கிலோ மஞ்சளும் உள்ளடங்குவதாக சுனில் ஜயரத்ன மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே சுங்க திணைக்களத்தில் நடைபெறும் மோசடிகளை கண்டறிய புதிதாக ஸ்கேன் இயந்திரம் ஒன்றினை அறிமுகப்படுத்த உள்ளதாக ஓய்வுபெற்ற சுங்க பணிப்பாளர் மேஜர் ஜெனரல் விஜித ரவிப்ரிய தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post