Top News

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள்


நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு வகையான துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வலஸ்கல, தெமயபிட்டிய பகுதியில் இருந்து வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ரிவேல்வர் ஒன்றும் , சொட்கன் ஒன்றும், ரைபிள் ஒன்று மற்றும் அதற்காக தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொம்பே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்று மற்றும் 70 மில்லிமீற்றர் வகை தோட்டாக்கள் 15 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியுடன் கஹவத்த பகுதியில் ஒருவரும், சிலாபத்துறை பகுதியில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகள் இரண்டுடன் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post