முஸ்லிம்களின் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..!

ADMIN
0

-அனீஸ்-

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அப்போது ஜனாதிபதி, இந்த நாட்டில் மாடு வாழவேண்டுமா இல்லை மனிதன் வாழவேண்டுமா என்று கேட்டார்.

அதற்கு துறவிகள், மனிதன்தான் வாழவேண்டும் என்றார்கள். 

அதற்கு ஜனாதிபதி அப்படியானால் மாடுகளை அறுப்பதில் தப்பில்லையென்றார். ஈற்றில் ஜனாதிபதி சொன்னார் சிங்களவர்களாகிய நாம் பன்றி உண்பதை நிறுத்தினால் முஸ்லிம்களும் மாடு உண்பதை உடனே நிறுத்துவார்கள்.

எனவே, நாம் நிறுத்துவது பற்றி யோசித்து முடுவெடுத்து நாளை வாருங்கள் அதுபற்றிய அறிவித்தலை நாளையே வர்த்தமானியில் வெளியிடுகின்றேன் என்று அனுப்பிவைத்தார்.

போனவர்கள் போனவர்கள்தான் இன்று வரை வரவே இல்லை.

சும்மா ஞாபகம் வந்திச்சு.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top