Top News

அதிரடியாக அதிகரித்த தேங்காய் விலையும் தென்னை மரமேறிய அமைச்சரும்


தேங்காய், பனை, , மற்றும் ரப்பர் தயாரிப்பு ஊக்குவிப்பு

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ அவர்கள் இன்று வழமையான முறைகளை மாற்றி வித்தியாசமான முறையில் ஊடக சந்திப்பு ஒன்று மேற்கொண்டார்.

தேங்காய் மரம் ஏறுவதற்கு இலகுவாக உருவாக்கப்பட்டுள்ள இயந்திரம் ஒன்றை பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த ஊடக சந்திப்பில் தென்னை மரத்தில் ஏறி இவர் ஊடக சந்திப்பை நடத்தியுள்ளார்.

தென்னை மரம் ஏறுபவர் களுக்கு ஒரு மரத்திற்கு குறைந்தபட்சம் நூறு ரூபாயாவது கூலியாக கொடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்த இராஜாங்க அமைச்சர், தற்போது தேங்காய் விலையும் அதிகரித்துள்ளது என தெரிவித்ததுடன் வரகாபொல பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இந்த மரம் ஏறும் இயந்திரம் பற்றியும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post