சஹ்ரான் யாரோ ஒருவரின் தேவைக்காவே தற்கொலை செய்தான் முக்கிய சாட்சிகளை வெளியிட்ட முஜிபுர் ரஹ்மான்.

ADMIN
1 minute read
0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வேறு நபர்களின் தேவைக்காகவே  ஹசீமினால் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாரென சரியான தகவலை தெரிந்துகொள்ள வேண்டுமாயின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் சாரா எனும் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் சாரா எனும் பெண் இந்தியாவில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் அவரை உடனடியாக அங்கிருந்து இலங்கைக்கு அழைத்து வர முடியுமாயின் தாக்குதல் தொடர்பில் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

விஷேடமாக இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு தற்கொலை தாக்குதல் நடத்துமளவுக்கு எந்த பிரச்சினையோ அல்லது தேவையோ இல்லை எனவும் அதனால் சஹ்ரான் இதனை வேறு யாரே ஒருவரின் தேவைக்காவே இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top