Top News

கப்பலில் பரவிய தீ கட்டுக்குள் ; நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி.


கிழக்கு கடற்பரப்பில் MT NEW DIAMOND எண்ணைக் கப்பலில் ஏற்பட்டிருந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாடுபட்ட அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது நன்றியை தெரிவித்துள்ளார்.

தங்கள் உயிரைப் பணயம் வைத்து MT New Diamond கப்பலின் தீயை அணைக்க இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக ஆணையம் மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு கடல் பல்லுயிரியலைப் பாதுகாப்பதில் உங்கள் பணியை நான் பெரிதும் பாராட்டுகிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு ஜனாதிபதி இவ்வாறு நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post