Top News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மைத்ரியின் அதிர்ச்சிதரும் வாக்குமூலம்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிரதிபொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர பொறுப்பேற்றால் வெளிநாட்டு தூதுவர்பதவியை அவருக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வந்தார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2019 ஏப்பிரல் 21 ம்திகதி இடம்பெற்ற ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று அக்காலப்பகுதியில் பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய பூஜித்ஜயசுந்தர பதவிவிலகினால் அவருக்கு ஓய்வூதிய த்தை வழங்குவதுடன் வெளிநாடொன்றின் தூதுவராகஅவரை நியமிப்பதாக ஏப்பிரல் 24 ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இது குறித்து தனதுஆலோசனையை பூஜித்ஜயசுந்தர நாடினார் என ஹேமசிறிபெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எனினும் பாரதூரமான விடயம் என்பதால் நான் அதனை தவிர்த்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நான் பூஜித்தை அந்த விடயத்தினை அவரது குடும்ப உறுப்பினர்களுடன் ஆராயுமாறு கேட்டேன் என ஹேமசிறி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் பிடியிலிருந்து பொலிஸ்மா அதிபரை விடுவிக்க முடியும் எனவும் மைத்திரிபால சிறிசேன அவருக்கு தெரியப்படுத்தினார் என ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post