வசீம் தாஜுதீன் வழக்கு முடித்து வைக்கப்பட்டது!

ADMIN
0

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் உயிரோடில்லாத நிலையில் அவ்வழக்கை மேலும் தொடர முடியாது என தீர்ப்பளித்து வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது நீதிமன்றம்.

குறித்த வழக்கின் முக்கிய சாட்சியங்களை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபரான பேராசிரியர் ஆனந்த சமரசேகர உயிரோடு இல்லாதமையைக் காரணங் காட்டியே இவ்வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் வசீம் தாஜுதீனின் உடலம் பரபரப்பாக மீளத் தோண்டியெடுக்கப்பட்டு மரணத்துக்கான காரணம் விபத்தில்லை, கொலையென அறிவிக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.இந்நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திலகரத்ன இவ்வழக்கு விசாரணையை முடிவுக்குக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top