அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் இன்று (29) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் தற்கொலை குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பினை கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே இன்று அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment