கடந்த நல்லாட்சியில் எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில்தான் அரசமைப்பின் 19ஆவது திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. எனவே, அந்தத் திருத்தத்தை இல்லாதொழித்து நாட்டை நாசமாக்கும் ராஜபக்சக்களின் திட்டத்துக்கு ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இடமளிக்கக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை முற்றாக வலுவிழக்கச் செய்யும் வகையில் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றும் வேலைத்திட்டத்தில் ராஜபக்சக்கள் களமிறங்கியுள்ளனர்.
குடும்ப அரசியல், எதேச்சதிகாரம் ஆகியவற்றின் ஊடாக நாட்டை ஆட்சி செய்யும் நோக்குடனேயே ஜனாதிபதியும், பிரதமரும் கங்கணம் கட்டிச் செயற்படுகின்றனர்.
இந்தக் கேவலமான நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் சென்றுள்ள எவரும் ஆதரவு வழங்கக்கூடாது. இது எனது அன்பான வேண்டுகோளாகும் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment