Top News

ரணில் மற்றும் அனுர ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வௌியேறினர்




முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் சற்று முன்னர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தமது வாக்குமூலங்களை வழங்கிய நிலையில் வௌியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இன்று (19) காலை சுமார் 10 மணி அளவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தமது வாக்குமூலங்களை வழங்குவதற்காக சென்றிருந்தனர்.

திவிநெகுமவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறீ ரணவக்க தாக்கல் செய்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள அரசியல்வாதிகளில் சிலரே இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.



மேலும் ரவூப் ஹக்கீம், சரத் பொன்சேகா, மலிக் சமரவிக்கிரம, ஆர். சம்பந்தன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோரும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகை தந்து வாக்குமூலம் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post