Top News

முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற போது, எங்களால் குரல் கொடுக்காமல் இருக்க முடியாது - சுமந்திரன்


‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். 

அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க முடியாது. அவர்கள் தீமை செய்கிறார்கள் என்பதற்காக நாம் தீமை செய்ய வேண்டுமென்பதில்லை. அவ்வாறான அரசியல்வாதிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை எம்மால் புறக்கணிக்க முடியாது’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பியும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கல்முனைக்கு வருகை தந்திருந்த சுமந்திரன் எம்.பி நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

‘முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற போது எங்களால் குரல் கொடுக்காமல் இருக்க முடியாது. எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்கப்படும் ​போது எங்களால் மௌனமாக வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

நாம் இன ஐக்கியம், நாட்டின் சமாதானம் கருதி சரியானவற்றையே செய்து வருகிறோம். தமிழ்க் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு நாம் பொறுப்பேற்கிறோம். மக்களுடைய எதிர்பார்ப்பு எம்மூலமாக நிறைவேற்றப்படவில்லை என்பது அதற்கான பிரதான காரணமாயிருக்கலாம்’ என்றும் சுமந்திரன் அப்பேட்டியில் குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post