நுவரெலியா, இராகலை நகரில் ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று கடைகள் தீக்கிரையாகியுள்ளன.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பிரதேச பொது மக்கள், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராகலை காவல்துறையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
அத்துடன் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என்பன தீக்கிரையாகியுள்ளன.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில்; மின் ஓழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment