மாடு வெட்டுதல் தடை விவகாரம் முஸ்லிங்களின் பாதிப்பாக மட்டும் பார்க்க வேண்டாம் -மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர்

ADMIN
0

எம்.எச்.எம்.றஸான்

மாடுகளை கொலை செய்வதை தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக பிரதமரினால் முன்மொழியப்பட்டது ஒரு யோசனையே தவிர அது அமைச்சரவை அங்கீகாரமோ அல்லது பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானமோ கிடையாது கல்முனை மாநகர சபை உறுப்பினர்  சப்ராஸ் மன்சூர் தெரிவித்துள்ளார்.

இதை விடுத்து வீண் கருத்துக்களை சமூக ஊடகங்களில் தெரிவித்து இதனை நிரந்தர சட்டமாக மாற்றுவதற்கு நாமே காரணமாகிவிடக்கூடாது. ஏற்கனவே நமக்கு ஒரு சூடு உள்ளது.

ஒரு விடையம் முடிந்ததன் பின் அதை தமது தேவைக்கு பயன்படுத்துபவர்கள் ஒருசில அரசியல் வாதிகள் மட்டுமே. நமது விடயத்தில் நாமே சாதுரியமாக நடந்துகொள்ளவேண்டும்.

இதை முஸ்லிங்களின் பாதிப்பாக பார்க்காமல், மாடுகளை வளர்த்து இறைச்சிக்காக விற்பனை செய்யும் மக்கள் எதிர்நோக்கும் வறுமையை பற்றி சிறந்த முறையில் கருத்துக்களை தெரிவியுங்கள்.

சாதகமான தீர்வு கிட்டும். எல்லா விடயங்களிலும்.

தோழர் சப்ராஸ் மன்சூர்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top