Headlines
Loading...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கர்தினால் ஆண்டகையும் அறிந்திருந்தாரா என ஹரின் ஆணைக்குழுவிடம் கேள்வி..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கர்தினால் ஆண்டகையும் அறிந்திருந்தாரா என ஹரின் ஆணைக்குழுவிடம் கேள்வி..


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து அதிமேற்றானியார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்கூட்டியே அறிந்திருந்தாரா என்பது குறித்து விசேட விசாரணையொன்றை ஆரம்பிக்க வேண்டுமென பா.உ ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று மாலை சாட்சிமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் முதல் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் தான் பதுளையில் இருந்ததுடன், தன்னுடன் தொடர்பை ஏற்படுத்திய சகோதரி ‘நாங்கள் தேவாலயத்துக்கு செல்ல இருந்தோம். கிங்கஸ்பெரி ஹோட்டலுக்கு செல்லவிருந்தோம். தந்தை நேற்றிரவு கூறினார், போக வேண்டாம் என்று’ என தெரிவித்தார். இச்சந்தர்ப்பத்தில் தான் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்பு கொண்டு ‘சேர்..எனது தந்தை முன்கூட்டியே அறிந்து வைத்துள்ளார்’ என கூறியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

பின்னர் கொழும்புக்கு வருகை தந்த தான் தனியார் வைத்தியசாலையொன்றில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையை சந்தித்து, தாக்குதல் தொடர்பாக நீங்கள் எவ்வாறு முன்கூட்டியே அறிந்து வைத்தீர்கள் என கேட்டபோது, உங்களை விட பல விடயங்கள் எனக்கு தெரியும் என மாத்திரம் பதில் அளித்தாக பா.உ தெரிவித்தார்.

குறித்த காலத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது தந்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் உறவு வைத்திருந்ததுடன், இவர்களில் ஒருவர் முன்கூட்டியே இதுகுறித்து அறிவித்திருந்தாரா என சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்தார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சாஜன் நந்தலால் என்பவரை தெரியுமா என சிரேஸ்ட சட்டதரணி கேள்வியெழுப்பிய போது, அவ்வாறான ஒருவரை தனக்கு தெரியாது என பா.உ தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் சாஜன் நந்தலாலுடன் ஹரின் பெர்ணான்டோவின் தந்தை 356 செக்கன்கள் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளமை தொலைபேசி புள்ளிவிபரங்கள் ஊடாக தெரியவந்துள்ளதாக சிரேஸ்ட சட்டதரணி தெரிவித்தார்.

வனாத்தவில்லுவில் வெடிப்பொருட்கள் கண்டெடுப்பதற்கு மற்றும் சஹ்ரான் ஹாஷிம் குழுவின் உறுப்பினரான ஆமி மொஹிதீன் என்பரை தேடி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் குழு பாசிக்குடா சென்ற போது இந்த நந்தலால் என்பவரும் கலந்து கொண்டுள்ளதுடன், ஆமி மொஹிதீனை கைது செய்யும் சந்தர்ப்பத்தில் அவரின் செல்லிட தொலைபேசியில் இருந்து நந்தலால் என்பவரின் புகைப்படம் கண்டெடுக்கப்பட்டதாக இங்கு தெரியவந்தது. ஊடக சந்திப்பொன்றில் தான் தெரிவித்த கருத்து, அரசியல் ரீதியில் சேறுபூசுவதற்கு பயன்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த சந்தர்ப்பத்தில், இவ்வூடக சந்திப்பில் தெரிவிக்கப்படாத விடயம் ஒன்று கூறப்பட்டதா என ஆணைக்குழு கேள்வியெழுப்பியது. தான் கூறியதை மாத்திரம் ஊடகங்கள் ஒளிபரப்பியதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததுடன், அவ்வாறு இருந்தால் தொடர்ச்சியாக ஊடகங்களை விமர்சிப்பது நியாயமற்றது என நீதிபதி கேள்வியெழுப்பினார்.

இத்தாக்குதல் குறித்து பெரும்பாலான தரப்பினர் அறிந்து வைத்து இருந்தமைக்கான தகவல்கள் தெரியவந்துள்ள நிலையில் ஆலயங்களில் மாத்திரம் இருந்தவர்கள் அறிந்து வைக்காததை தான் நம்ப போவதில்லையென பா.உ தெரிவித்தார். ஆண்டுதோறும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலை தேவ ஆராதனையை நடத்தும் பின்னணியில் கடந்த ஆண்டு மாத்திரம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஆராதனையை நடத்தாமை அவர் தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தாரா என்பது குறித்து விசாரிக்க வேண்டுமென ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

அதிமேற்றானியார் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டதரணி சமில் பெரேரா கருத்து தெரிவிக்கையில் அதிமேற்றாணியார் ஆண்டுதோறும் உயிர்த்த ஞாயிறு தேவ ஆராதனையை அதற்கு முன் தினமான சனிக்கிழமை நள்ளிரவே நடத்துவதாக தெரிவித்தார். கடந்த ஆண்டிலும் ஏப்ரல் 20ம் திகதி நள்ளிரவு கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் தேவராதனையை நடத்தியதாக சட்டதரணி தெரிவித்தார்.

0 Comments: