சிலோன் முஸ்லிம் இணையத்தளம் மற்றும் J.J பவுண்டேஷன் ஏற்பாட்டில் ‘போதை பாவனையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம்’ எனும் தொனியில் போதை ஒழிப்பு இளைஞர் மாநாடு இன்று கெகுணகொள்ள தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இம்மாநாடானது கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் அதிபர் சித்தீக் தலைமையில் இடம்பெற்றதுடன் இம்மாநாட்டில் தரம் 9 தொடக்கம் 13 வரையிலான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
இதன் போது J.J பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் டாக்டர் எல்.வை.எம் ஹனீப் பிரதம விருந்தினராக கலந்து கொண்டர்.
மேலும் இந்த நிகழ்வில் வளவாளராக மனநல ஆலோசகர் மனூஸ் அபூபக்கர் விமானப்படை அதிகாரி அஸாம், சிலோன் முஸ்லிம் ஊடக பிரதானி ரிம்சி ஜலீல் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment