Top News

சம்பிக்கவின் சவால் மஹிந்த அரசாங்கம் செயற்படுத்துமா?


நாடு வங்குரோத்து அடையாது முன்னெடுத்துச் செல்வது சவாலான விடயம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,
முடிந்தால் கடன் தவணைகளை கிரமமாக செலுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லும் சவாலை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறுகிய காலத்தில் நாடு வங்குரோத்து அடைவதனை தடுப்பதே மிகப் பெரிய சவாலாக காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் அமைப்பிற்கும் சட்டத்திற்கு முரணான வகையில் நாம் பணத்தை செலவிட்டால் அது நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்லும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


70 ஆண்டுகள் ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கமும் கடன் செலுத்துவதனை தவறவிட்டதில்லை எனவும், அரசாங்கத்தின் பொருளியல் நிபுணர்கள் இணைந்து முடிந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு கடன் தவணைகளை உரிய முறையில் செலுத்தி நாட்டை நடத்திச் செல்லுமாறு சவால் விடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post