பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவு காரணமாக தனது 74 ஆவது வயதில் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஓகஸ்ட் மாதம் 5-ம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருடைய உடல்நிலை ஓகஸ்ட் 14-ம் திகதி மீண்டும் மோசமடைந்தது.
பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்.பி.பிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சில நாட்களில் கொரோனாவில் இருந்து சுகமடைந்திருந்தார்.
இந்நிலையிலேயே பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.
Post a Comment