கொழும்பில் சைக்கிள் லேன் அறிமுகப்படுத்த திட்டம்

ADMIN
0

கொழும்பு துறைமுக நகர நுழைவாயில் முதல் பத்தரமுல்ல தியத்த உயன வரை பிரத்யேக சைக்கிள் லேன் அறிமுகப்படுத்தும் திட்டம் பற்றி தகவல் வெளியிட்டுள்ளது நகர அபிவிருத்தி சபை.

கொரோனா சூழ்நிலையில் உலகின் முக்கிய நகரங்களில் துவிச்சக்கர வண்டி பாவனைக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையிலும் பிரத்யேக ஒழுங்கை உருவாக்குவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது.

1.5 முதல் 2.5 மீற்றர் அகலமான ஒழுங்கை திட்டமிடப்பட்டுள்ளதுடன் 2021 இறுதியளவில் பிரத்யேக சைக்கிள் லேன் பாவனைக்கு வரும் என மேல் மாகாண நகர அபிவிருத்தி பணிப்பாளர் ஏ. குணதிலக்க விளக்கமளித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top