புஸ்ஸ சிறைச்சாலையில் வைத்து ஜனாதிபதிக்கு, பாதுகாப்பு செயலாளருக்கு மற்றும் சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கு பகிரங்கமாக மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பிலான வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவராக பாதாள உலகக்குழு உறுப்பினர் ´பொடி லெசி´ என அழைக்கப்படும் ஜனித் மதுசங்கவை பெயரிட்டு காலி பிரதான நீதவான் இன்று (17) உத்தரவிட்டார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சீராக்கல் மனுவொன்றின் மூலம் மேற்கொண்ட கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் சந்தேகநபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.