ஹெரோயின் போதைப் பொருடன் தேரர் உட்பட மேலும் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் வாரியபோல பகுதியில் கைது செய்யப்பட்டதோடு அவர்களிட மிருந்து சுமார் 8ஆயிரத்து 950 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சிலாபம் – நாவின்ன வீதியில் அமைந்துள்ள கிராமத்தில் வீடு ஒன்றைப் பரிசோதனை செய்தபோது தேரர் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தேரர் சில சமயங்களில் ஒரு துறவியாகவும் மற்ற நேரங்களில் ஒரு சாதாரண நபராகவும் செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment