நீதிமன்ற உத்தரவையும் மீறி தியாகத்தீபம் திலீபனை அனுஸ்டிக்க முயற்சித்தபோது கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கடும் எச்சரிக்கையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி 2 இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுதலை செய்துள்ளார்.
சிவாஜிலிங்கத்திற்கு சார்பாக, சிரேஷ்ட சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா, வி. மணிவண்ணன், க. சுகாஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.
வழக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
Post a Comment