வெள்ளிக்கிழமைகளில் பொது சேவை ஊழியர்கள் 'தேசிய' ஆடைகளை அணியுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர.
முன்னதாக இதனைக் கட்டாயமாக்கப் போவதாக அறிவித்திருந்த அவர், தற்போது அதனை வேண்டுகோளாக முன் வைத்துள்ளார். தேசிய சிந்தனையுணர்வை வளர்ப்பதற்கு இது உதவும் எனவும் உள்நாட்டு ஆடைத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் நெடுங்காலமாக உபயோகிக்கப்படும் பதிக் வடிவமைப்புகளை மாற்றி புதிய வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தி அதனூடாக ஊக்குவிப்பை மேற்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment